2ND ANNUAL WORLD TAMILAR FESTIVAL

உலக தமிழர் திருநாள் விழா -2016 கோலாகல கொண்டாட்டம்

உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து உலக தமிழ் வர்த்தக சங்கம் வழங்கும் “2–வது உலக தமிழர் திருநாள் “விழா சென்னை சேத்துப்பட்டு சின்மையா ஹெரிடேஜ் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மேதகு தமிழகஆளுநர் கே. ரோசய்யா அவர்கள் வருகை தந்து விழாவை துவக்கி சிறப்பித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர் பாரிவேந்தர் அவர்கள் (வேந்தர்- எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்), முனைவர் A .C. சண்முகம் அவர்கள் (நிறுவனர் – டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்), பேராசிரியர் CMK. ரெட்டிஅவர்கள் (தலைவர்–தமிழ்நாடு மருத்துவ பயிற்சியாளர் சங்கம்), திரு .நாசர் அவர்கள் (தலைவர்–தென்னிந்திய நடிகர் சங்கம்), டாக்டர் ஹஜ் முகம்மது சொய்பு பின் முகமத் யூசுப் தலைவர் – சர்வதேச நாணயம் பரிமாற்ற பிரிவு, WTCC,திரு. ஜான் தன்ராஜ்

நெறியாளர்- உலகதமிழ்வர்த்தகசங்கம், WTCC, போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் தமிழ் பாரம்பரியமிக்க பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தாரை தப்பாட்டம், சிலம்பாட்டம், ஆடை அணிவகுப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

உலக தமிழர் விழாவில் தமிழக ஆளுநர் கூறியதாவது , உலக தமிழர் பெஸ்டிவல் நோக்கம், திரைக்கடல் ஓடி திரவியம் தேடு என்ற நோக்கத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழாக பிரிந்து உலகெங்கும் பரந்து விரிந்து உள்ள நம் தமிழ் சமுதாயம். எங்கு வாழ்ந்தாலும் நம் கலை, கலாச்சாரம், தமிழ் கல்வி, ஆன்மீகம் போன்றவைகளை பின்பற்றி தமிழ் சமுதாயத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு – தமிழ் வம்சாவளியினரை வருடம் ஒருமுறை ஒன்றிணைத்து ஜனவரி 10ஆம் தேதி உலக தமிழர் திருநாள் விழாவை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.

உலக தமிழ் வர்த்தக சங்கம் ஏற்படுத்தி வர்த்தகம் மட்டும் அல்லாது தமிழ் பாரம்பரியத்தை உலகெங்கும் எடுத்து செல்லும் பணியை மேற்கொண்டிருக்கும் உலக தமிழ் வர்த்தக சங்க தலைவர் ஜெ. செல்வகுமார் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். அயல் நாடுகளில் இருந்து வரும் கல்வியாளர்கள், தமிழ் அறிஞர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இயல், இசை, நாடகம், தமிழ் வழி கல்வி போன்றவைகளை கண்டு அந்நிகழ்வை தங்கள் நாடுகளில் செயல்முறையின் போது மாணவர்களில் சிந்தனை மேம்பட்டு சிறந்த மாணவனாகவும் அவன் மூலம் பல மாணவர்களை உள்ளடக்கிய சிறந்த சமுதாயமாக உருவாக்க முடியும்.

நம் முன்னோர்கள் கலையில் பரதம், மிருதங்கம், நாட்டியம் பல நிகழ்வில் நம் உடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கு ஏற்றார் போல் அமையபெற்றதால் நம் கலை கலாசாரத்திற்கு உலகெங்கும் உள்ள மற்ற சமுதாயத்தினரும் வரவேற்கின்றனர் . இது போன்ற நல்ல நிகழ்வை நடத்தி வரும் உலக தமிழ் வர்த்தக சங்கத்தை என்னை அழைத்து10.01.2015 அன்று துவக்கி வைத்ததில் பெருமை அடைகிறேன். 2ஆம் வருடமும் இந்நிகழ்வு முன்பைவிட சிறப்பாக அமைத்ததிற்க்கும் அதில் நான் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. வரும் காலங்களில் வர்த்தக கருத்தரங்கம், வர்த்தக கண்காட்சி போன்றவைகளை இதன்மூலம் நடத்தி அனைவரும் பயன் பெற வேண்டும் என செல்வகுமாரை வாழ்த்துகிறோம் என சிறப்புரையாற்றினார்.

மேலும் இவ்விழாவில் சாதனையாளர்களுக்கான விருதுகளும், நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டது. சாதனையாளர்களுக்கான விருது திருக்குரானை எளிமையான நடையில் வழங்கியதை பாராட்டி சர்வதேச நாணயம் பரிமாற்ற பிரிவு தலைவர் டாக்டர் ஹஜ் முஹம்மது சொய்பு முஹமத் யூசுப் அவர்களுக்கும், சமுகசேவை பணியை பாராட்டி திரு. எட்வர்ட் சுப்பிரமணி அவர்களுக்கும், கல்விப்பணியை பாராட்டி திரு V.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும்,சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு மனித நேயத்துடன் சிறப்பாக பணியாற்றியதைபாராட்டி (ஸ்ரீ தமிழ்நாடு ஜெயின் மகாமந்திர்) திரு. ஸ்ரீ கைலாஷ் கோத்தாரி, பாரஸ் ஜெயின், கைலாஷ் ஜெயின் அவர்களுக்கும்,சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு மனித நேயத்துடன் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி RSSசேவா பாரதி அறங்காவலர் திரு.துரைசங்கர் அவர்களுக்கும்,மேற்கத்திய இசையில்தமிழ்பாடல்களைஉலகெங்கும்கொண்டுசென்றதைபாராட்டி பாடகர், பாடலாசிரியர்மற்றும்இசையமைப்பாளர் திரு. ஹிப் ஹாப் தமிழா ஆதிஅவர்களுக்கும், விளையாட்டு துறையில் சாதித்ததை பாராட்டி குத்துசண்டைவீராங்கனை துளசி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

ULAGA TAMIZHAR THIRUNAAL VIZHA 2016 HELD IN RANDEUR

Celebrating the moment of Tamil is always a special pride and honour to every being across the planet. Tamil is beyond the language and yes, the world originated and the first man on earth spoke this language. While many languages are haunting the regional arenas, few personalities are really emerging to be unique ones in bringing forth the unparalleled traits of this culture, arts and its beauty.

The World Tamil Chamber of Commerce celebrating the Ulaga Tamizhar Thirunaal Vizha 2016 was held on Sunday evening at Chetpet auditorium. Honourable Governor of Tamil Nadu K Rosaiah, Tamil Nadigar Sangam President Nasser, Hon’ble Paari Vendhar, Honourable AC Shanmugam, Hon’ble Radhakrishnan, Minister of Education, Srilanka, Dr CMK.Reddy and many others were present during the occasion.

Honourable AC Shanmugam speaking on the occasion graciously rendered a heart-warming speech, where he didn’t miss to appreciate the most fascinating deeds of Mr. Selvakumar, World Tamil Chamber of Commerce for taking special efforts in hosting such great events. In terms of commerce and cultural development, it has been a spellbinding vision.

The most honoured Paari Vendhar took upon the occasion and rendered his speech claiming this to be an auspicious occasion. He expressed his unconditional bonding towards the language of Tamil by utilizing the platform of Puthiya Thalaimurai. “We all should be united as Tamilians. We should never give up the self-respect and values. The one who losses the selfvalue and self respect are not a Tamilian…. I wholeheartedly extend my thanks to Mr. Selvakumar for this wonderful effort.”

Actor Nasser turned to be the most appealing cynosure where he uttered certain brilliant facts that eventually exhibited his vast and voracious knowledge about the ethnicity of Tamil. “In many parts of the world, especially in the panorama of drama and cultural arts, Greek has been regarded as the pioneers, but some of our ancient classic works like Silapathigaram remains to be a buried masterpiece and such an effort of organizing World Tamil Chamber of Commerce would instantly get us so much of elegance to the Language of Tamil.

Embellishing the moment was the inspiring speech of honourable Governor of Tamil Nadu, K Rosaiah who offered a sweet and simple speech over the occasion…

Mr. Selvakumar, the man behind the origin and success of World Tamil Chamber of Commerce played a perfect host and indeed was the special attraction of the occasion as every special celebrity including Tamil Nadu Governor extending their heartfelt appreciations and acclamations towards his exceedingly exceptional effort in nurturing the essence and prominence of Tamil and its culture.

The event was followed by an esthetical dance and cultural event that brought forth an amalgamation. Some of the eminent personalities like Dr. Haji, Mohammed Suibu was awarded a special felicitation for the greatest gesture of translating the Holy Book of Quran in Tamil. Other special recipients were Bishp Rev. Dr. Edward Subramaniam (Hotel and Tourism Division WTCC), Thiru. Sri Kailash Kothari, Paras Jain – Kailash Jain (Major involvement during the Chennai relief flood mission), Thiru Durai Shankar President and Trustee – Sevabharathi Tamil Nadu, Thiru Hiphop Tamizha Adhi (Playback singer, Lyricist & Music Composer) and Thirumathi Thulasi (Pofessional boxer).