10th ANNUAL GLOBAL ORGANISATION OF TAMIL ORIGIN MEET

10ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு கோலாகல துவக்கம்

10ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு கோலாகல துவக்கம்

10ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஜனவரி 6ஆம் தேதி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தலைமையில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்த, மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களும், மலேசியாவைச் சேர்ந்த பினாங்கு மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு, நாடாளுமன்ற உறுப்பினர் யுனேசுவரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன் குமரன், குமரேசன், விஐடி துணைத் தலைவர் செல்வம் அவர்களும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தமிழ் பாரம்பரிய மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழறிஞர்கள் பேராளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் மிக்ஜாம் புயலின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியாவில் இருந்து உதவி செய்த டத்தோ ஸ்ரீ ஹரிஹரன் அவர்களுக்கும், KPY பாலா அவர்களுக்கும், சாதனையாளர் விருதும், இலங்கையைச் சேர்ந்த பிரகாஷ் அவர்களுக்கு தமிழ் நிறுவன விருதும், சிறந்த ஊடக சேவைக்கான விருது, மலேசிய தமிழ் மலர் சேர்ந்த நவநீதன் அவர்களுக்கும், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. உணவு இடைவெளிக்கு பிறகு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சொற்போர் எனும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு துணைவேந்தர் ஆறுமுகம் அவர்களும், பதிவாளர் செந்தில்குமார் அவர்களும் பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது