5TH ANNUAL WORLD TAMILAR FESTIVAL

சென்னையில் 5ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா துவக்கம்:

5ஆம் ஆண்டு உலகத்தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத்தமிழ் வம்சாவளியினர் ஒன்றுகூடல் நிகழ்வு ஜனவரி மாதம் 5, 6 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது.

மேதகு தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் துவக்கி வைக்க இறுதி நாளில் மேதகு கேரள ஆளுநர் தலைமை நீதியரசர் .P.சதாசிவம் அவர்கள் நிறைவு செய்து பேருரை ஆற்றினார்.

திரு ஐசரி கணேஷ், வேந்தர்- வேல்ஸ் பல்கலைகழகம், வேந்தர் கோ. விஸ்வநாதன், வி.ஐ.டி பல்கலைக்கழகம், மரு குருஷங்கர் மீனாட்சி மிஷன் – மருத்துவமனை, முனைவர். பழனி .ஜி .பெரியசாமி, முனைவர் AC. சண்முகம் - டாக்டர் MGR பல்கலைக்கழகம், மற்றும் திரு பீட்டர் அல்போன்ஸ், நடிகர் பொன்வண்ணன் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், தமிழர் ஆடை அலங்கார அணிவகுப்பு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சியரங்கு ஆகியவையும் நடைப்பெற்றது.

பல்வேறு நாடுகளில் பலத்துரைகளில் சாதனைப் புரிந்த ஆறு பேருக்குச் சாதனைத் தமிழன் விருதும் ஆசிரியப் பணியில் சாதனைப் புரிந்த ஐவருக்கு நல்லாசான் விருதும் வழங்கப்பட்டது. சாதனைத் தமிழன் விருதினை ஆளுநர் அவர்களும் நல்லாசான் விருதினை மலேசிய மேனாள் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ கமலநாதன் அவர்களும் வழங்கி சிறப்பித்தனர்.

சாதனைத் தமிழன் விருது: 1. சிறுமி உமையாள் மெய்யம்மை (சென்னை), 2. இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இராம் பிரசாத் மனோகர், 3. தொழிலதிபர் இரவி குருதாசன்( கனடா), 4. சித்ரா தேவி இராமையா (தூதர், மலேசிய தூதரகம் போலந்து) 5. தொழிலதிபர் இலட்சுமணன்(சென்னை) 6. ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி செயல் தலைவர் முனைவர் இராஜாமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நல்லாசான் விருதினைத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரிரியர்களான 1.திரு. பகவான்,2. திருமதி இந்திரா. 3. திருமதி பிரேமா, 4. திரு. சக்திவேல் மற்றும் 5. உயர்கல்வித்துறையின் சார்பில் அயல்நாடுகளில் தமிழ் வளர்ச்சிக்கு அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களோடும் தமிழ்ச் சங்கங்களோடும் இணைந்து பாடுபட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. சிதம்பரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அயலக அரசியலில் தமிழர்கள் என்ற தலைப்பில் திருமிகு வைகோ மற்றும் திருமிகு தொல்.திருமாவளவன் அயலக அரசியல் தமிழர்களுடன் கலந்துரையாடினர். உலக தமிழ் பல்கலைக்கழகம் -மின்னியல் லட்சிச்சினை துவக்கம் நடைப்பெற்றது.

மாநாட்டின் தீர்மானங்களாக, உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செல்வகுமார் மாநில மத்திய அரசுகளிடம் வெளியிட்ட கோரிக்கையின் விவரம் வருமாறு:

- தமிழக அரசு, அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் நலனுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்.
- மத்திய அரசு அயலக தமிழர்களின் நலனுக்காக அவர்களின் பிரச்சினைகளை களையும் பொருட்டு நியமன ராஜ்யசபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்
- உலகமக்கள் தொகையில் 2சதவிகிதம் உள்ள தமிழர்களில் அயலகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு People of Indian Origin போல் People of Tamil origin என அடையாள அட்டை வழங்கவேண்டும்
- நம் கலை கலாச்சார பண்பாடுகளை அயலக தமிழர்கள் அறியும் வகையில், அயலக தமிழர்களை ஆண்டு தோறும் அழைத்து உலகத்தமிழர் திருநாள் விழா நடத்த மத்திய மாநில அரசு உதவவேண்டும்.
- அயல் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்க மத்திய அரசு உதவ வேண்டும்

5TH ANNUAL ‘WORLD TAMILAR FESTIVAL’ HELD IN GRANDEUR @CHENNAI

5th Annual World Tamilar Festival’ & Global Organisation of Tamil Origin Meet was held in grandeur @Kalaivanar Arangam, Chennai on 5th & 6th Jan 2019. Worldwide Tamil Entrepreneurs, Educationalists, Vice- Chancellors, Industrialists, Scientists & more Tamil Legends from different Countries made their honorable presence.

Thiru Banwarilal Purohit, Hon’ble Governor of Tamilnadu made his esteem presence for INAUGURATION & Hon’ble Shri Justice. P. Sathasivam, Honorable Governor of Kerala for CLOSING CEREMONY.

We are also elated in beautifying the event with different sessions - Art & Culture, Tamil Music Fest, Tamil Originated Cultural programs, Food fest, Sadhanai Tamilan Award Ceremony, Best Teachers Award etc. ‘World Tamil University – Digital’ launch was held.

Thiru G.Viswanathan, Founder of VIT University, Thiru Isari Ganesh, Chancellor of Vels University, Dr AC Shanmugam, Chancellor of Dr MGR University, Dr Gurushankar – Chairman, Meenakshi Mission Hospital, Dr Palani G. Periasamy - Chairman, PGP Group of Companies, Thiru Vaiko, Thiru Thirumavalavan, Thiru Peter Alphonse, Actor Ponvannan & many more celebrities participated as Chief Guests.

Thiru Selvakumar, Organizer of ‘World Tamilar Festival’ announced the Resolutions of Conference as requisitions to State & Central Government as follows:

- Government of Tamil Nadu, should establish a separate concern for the welfare of the Tamilians living in foreign countries.
- In order to Express and address the concerns of the foreign tamilians, the central government should have a appointed Rajya Sabha Member for their welfare.
- Just like the identification card people of Indian origin been given to Tamilians settled in foreign countries the same way people of Tamil origin should be given to Tamilians who are living in foreign countries who make 2% of the total world population.
- The Central and State Government should come forward to help in organising World Tamilar Festival by extending invitation to Tamilians all around the world so that our traditions and arts will be known and understood by the foreign tamilians.
- The Central Government should help the Tamilians settled abroad to learn Tamil.